மே 20ஆம் தேதி வெளிநாடு செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்… ஒரு வாரம் லண்டன், ஜப்பான் நாடுகளுக்கு பயணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2023, 5:41 pm

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற மே 2-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அமைச்சர்கள் வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் வெளிநாட்டு பயணம் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 20-ம் தேதிக்கு பிறகு லண்டன் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வெளிநாட்டு பயணம் ஒரு வார கால பயணமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் , தொழில் முதலீடுகளை ஈப்பது தொடர்பாக தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து மே 2-ம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 457

    0

    0