திமுகவுக்கும் பாஜகவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் : அண்ணாமலை குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரபர பதில்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 May 2022, 9:34 pm

டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை நீர் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

டெல்டா மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வு குறித்து திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:- டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தது மன நிறைவு மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது. நீர் நிலை தூர் வாரும் பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை நீர் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து நீர்வழித் தடங்களிலும் தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. வடகிழக்கு பருவமழையின் போது சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்காமல் காக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை நீர் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரூர் – 19, திருச்சி – 90, நாகை – 30, மயிலாடுதுறை – 49 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி என்ற வாக்குறுதி செயல்படுத்தப்படுகிறது. மகசூலை பெருக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.

காவிரி நீரை முறையாக பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும். நடப்பாண்டில் 1.56 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

அப்போது செய்தியாளர்கள் அண்ணாமலை விமர்சனம் குறித்து எழுப்பிய கேள்விக்கு, அண்ணாமலை அரசியல் செய்கிறார், நாங்கள் மக்களுக்கு நல்லது செய்கிறோம் என கூறினார்.

  • Actor Kavin Tortured Producers அடுத்த விஜய் நான்தான்.. முழுசா சந்திரமுகியாக மாறிய இளம் நடிகர்.. தயாரிப்பாளர்களிடம் கறார்!