இனி பதவி பறிக்கப்படும்.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு : மாவட்ட செயலாளர்கள் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2023, 2:21 pm

இனி பதவி பறிக்கப்படும்.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு : மாவட்ட செயலாளர்கள் அதிர்ச்சி!!

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் தோற்றால் மாவட்டச் செயலாளர் பதவி பறிபோகும் என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் .

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 1ஆம் தேதியான இன்று திமுக தொகுதி பார்வையாளர்கள்/ மாவட்டச் செயலாலர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என துரைமுருகன் அறிவித்திருந்தார். அதன்படி காணொலி வாயிலாக கூட்டம் நடைபெற்றது.

எல்லாவற்றுக்கும் மேலக நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் தோற்றால் மாவட்டச் செயலாளர் பதவியை பறித்துவிடுவேன் என்பதை மிக ஓபனாக கூறி எச்சரித்துள்ளார். இதனால் சம்பிரதாய கூட்டம் என எண்ணி வந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் கொடுத்தது.

நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்பதில் முதலவர் ஸ்டாலின் மிக உறுதியாக உள்ளார் என்பது இதிலிருந்தே தெரிகிறது. இதனிடையே கட்சியின் தொண்டர்களையும், கீழ்மட்ட நிர்வாகிகளையும் அணுசரித்துச் செல்ல வேண்டியது பற்றியும் அட்வைஸ் அளித்திருக்கிறார்.

கோஷ்டிப் பூசலை மனதில் வைத்துக் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யாரேனும் வேலையை காட்டினால் அப்போதிருக்கிறது கச்சேரி என்பதை சூசகமாக உணர்த்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மொத்தத்தில் திமுக மாவட்டச் செயலாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும், கட்சியில் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் நாடாளுமன்றத் தேர்தல் அக்னிப் பரீட்சையாக அமைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 460

    0

    1