பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு : நாளை பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்படுகிறார்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2022, 6:14 pm

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை உயிரிழந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தாயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றது. இதையடுத்து காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது.

தாயின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார். பிரதமரின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தாயை இழந்த துயரம் எவராலும் தாங்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். நாளை காலை 7 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார்.

முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்ல இருந்தார். ஆனால் பிரதமர் மோடி குஜராத்தில் இருந்து டெல்லி திரும்ப தாமதம் ஏற்பட்டதால் பயண திட்டம் மாற்றப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 357

    0

    0