சட்டத்தையும், நீதியையும் சாமானியர்களுக்கு புரிய வைக்க இதை செய்ய வேண்டும் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2022, 2:54 pm

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், நீதிபதிகள் நியமனம், தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளைகள் அமைத்தல், தமிழை வழக்காடு மொழியாக அறிவித்தல் ஆகிய கோரிக்கைகள் முன்வைத்து, இதுதொடர்பாக நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

உச்ச நீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாசார பிரதிநித்துவம் அமைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதில் சமூக பன்முகத்தன்மை, சமூக நீதியை பேணும் வகையில் மாற்றம் தேவை எனவும் கூறியுள்ளார்.

மேலும், சட்டத்தையும், நீதியையும் சாமானிய மக்களுக்கு புரிய வைப்பது நீதி வழங்கல் துறையின் கடமை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

  • santhanu reply to a fan that comment on vijay sethupathiவிஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?