முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட போன் கால்.. மனஉளைச்சலில் இருந்த சரத் பவாருக்கு கூறிய மகிழ்ச்சியான செய்தி..!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2023, 4:54 pm

மராட்டிய அரசியலில் பெரும் திருப்பமாக, எதிர்க்கட்சித்தலைவர் அஜித் பவார் மற்றும் மற்ற தேசியவாத காங்கிரஸ்(என்சிபி) கட்சியின் எம்.எல்.ஏக்கள் சிலர் ஆளும் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளனர்.

மேலும் நேற்று ஆளுநர் மாளிகையில் அஜித் பவார் மற்றும் 9 என்சிபி எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றார்.

இதுகுறித்து என்சிபி யின் தலைவர் சரத் பவார், எனது கட்சி உடைந்ததாக நான் கூறமாட்டேன், இந்த பிரச்சினை எனக்கு மட்டுமல்ல, மக்களின் பிரச்சினையும் கூட என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தேசியவாத காங். தலைவர் சரத்பவார் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசியுள்ளார். மேலும், தனது முழு ஆதரவும் உங்களுக்கு உண்டு எனவும் சரத்பவாரிடம் முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!