நம்ம ராசி அப்படி… அன்னைக்கே கலைஞர் சொன்னார் : திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!
Author: Udayachandran RadhaKrishnan10 November 2022, 9:22 pm
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தண்ணீர் கஷ்டம் என்பது மறைந்து போகும் அளவிற்கு மழை வந்துள்ளது என ஈரோட்டில் திமுக நிர்வாகி இல்லத் திருமணவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
கலைஞர் முதல்வராக இருந்தபோது சென்னையில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை பார்வையிட்டதை முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஆட்சிக்கு வரும் போது கொரோனா என்று கொடிய நோயை சந்தித்தோம். பின்னர் அதிலிருந்து மீண்டோம்.
1996ஆம் ஆண்டு மேயராக தேர்வு செய்யப்பட்ட பின், மறுநாளே மழை. விடாமல் 10 நாள் மழை. அப்போது முதலமைச்சர் நம்ம தலைவர் கலைஞர்தான் இருந்தாரு.
அப்போது வேடிக்கையாக கலைஞர் சொன்ன வார்த்தை, சென்னைக்கு ஸ்டாலின் எப்ப மேயரா வந்தானோ, அன்னையில் இருந்து மழை பெய்து கொண்டே இருக்குனு சொன்னாரு என கருணாநிதி அவர்கள் கூறியதை சுட்டிக்காட்டினார்.
இது திமுக ராசி மட்டுமல்ல உங்க ராசியும் தான்.. இப்பவும் மழை பெய்து வருகிறது என கூறினார்.