கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்ய முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ளார் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2024, 2:17 pm

கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்ய முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ளார் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தஞ்சை அடுத்த வல்லத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு 70 அடி உயர கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்து பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்க்க அல்ல தான் கொள்ளையடித்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்ய சென்றிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.

இந்த அரசு விவசாயிகளை எதிரி போல் பார்க்கிறது. டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி காய்ந்து குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்து இருந்தால் விவசாயிகளுக்கு 84,000 கிடைத்திருக்கும்.

இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துவிட்டார்கள். கெடுக்க நினைத்தவர்கள் கெட்டுவிட்டார்கள். டெல்டா மாவட்டங்களுக்கு வந்த பிறகுதான் தெரிகிறது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுகவிற்கு மரண அடி கொடுக்க வேண்டும் என்றார்.

முன்னதாக தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி: பழனிச்சாமிக்கு வல்லத்தில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  • Kalaipuli S. Thanu updates on Vaadivaasal வாடி வாசலை திறந்து விட்ட எஸ்.தாணு…சீறிப்பாயுமா வெற்றிமாறன்-சூர்யா கூட்டணி…!