கோவை மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் உள்ள இந்து மத கடவுள் சிவன் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஜமேஷா முபின் (வயது28) என்பவர் பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் ஜமேஷா முபின் வீட்டில் நடத்திய சோதனையில் 75 கிலோ வெடிமருந்து உள்பட 109 வகையான பொருட்கள் கைப்பற்றினர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த ஜமேஷா முபினுக்கு உடந்தையாக செயல்பட்டதாக 6 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் (சட்டவிரோத செயல் தடுப்பு சட்டம்) வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஜமேஷா முபின் மற்றும் சிலர் 3 இந்து மதவழிபாட்டு தலங்களை தகர்க்க ஒத்திகை பார்த்த அதிர்ச்சி தகவலும் வெளியானது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. தனது விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ஜாதி, மதம், மொழி ரீதியாக மக்களை பிரித்தாள்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கமாட்டார்.
தமிழ்நாடு அரசு மதம், ஜாதி சார்ந்த அரசு அல்ல. தமிழ்நாடு அமைதி பூங்காவாக விளங்குவதற்கு எப்படிப்பட்ட மதவாத சக்திகள் தலைதூக்குமாயினும் அந்த மதவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்குவதற்கு முதல்-அமைச்சர் தயங்கமாட்டார்’ என்றார்.
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
This website uses cookies.