டெல்லிக்கு செல்ல முதலமைச்சர் முடிவு… பின்வாங்கிய மம்தா : இண்டியா கூட்டணியில் இடியாப்ப சிக்கல்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2024, 11:01 am

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.

வருகிற 1-ந்தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி ஓட்டுக்கள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும்.

அன்று மதியம் மத்தியில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். மொத்தம் உள்ள 543 இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி 3-வது தடவையாக ஆட்சி அமைக்க தீவிரமாக உள்ளது.

400-க்கும் மேற்பட்ட இடங்களை குறி வைத்து அந்த கட்சி பிரசாரம் செய்துள்ளது. ஆனால் இந்தியா கூட்டணி தலைவர்கள் தாங்கள்தான் மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று கூறி வருகிறார்கள்.

மேலும் படிக்க: இரவு நேரத்தில் டார்ச் லைட் அடித்து அந்த தொழிலுக்கு அழைப்பது போல லாரிகளை நிறுத்தி வழிப்பறி.. சிக்கிய கும்பல்!

தங்களுக்கு 350 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்தியா கூட்டணி தலைவர்கள் நம்பிக்கையுடன் தினமும் தெரிவிக்கிறார்கள். இதன் காரணமாக மத்தியில் யார் ஆட்சி அமையும் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வருகிற 1-ந்தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ் வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா, ராஷ்டீரிய லோக் தளம் உள்பட 28 கட்சிகள் உள்ளன.

இந்த 28 கட்சி தலைவர்களுக்கும் டெல்லியில் 1-ந்தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இக்கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

வருகிற 1-ந்தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளும் மு.க.ஸ்டாலின் 2-ந்தேதி சென்னை திரும்புகிறார். இதனிடையே, இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பேச வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். முன்னதாக, இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகள் முடிவுக்கு கட்டுப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!