பாலியல் புகாரில் சிக்கிய தலைமை செயலாளர் சஸ்பெண்ட் : உடனே புதிய தலைமை செயலாளர் நியமனம்.. அந்தமான் நிகோபார் அரசு அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2022, 8:28 pm

அந்தமான் நிகோபார் அரசின் தலைமை செயலராக இருந்தவர் ஜிதேந்திரா நாராயண், இவர் மீது கடந்த ஜூலை மாதம் 21 வயது இளம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதில் தன்னை ஜிதேந்திரா நாராயண், தொழிலாளர் கமிஷனர் ஆகிய இருவரும் சேர்ந்த கூட்டு பலாத்காரம் செய்ததாக அந்த புகாரில் கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் அதன் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து ஜிதேந்திரா நாராயண் கடந்த ஆகஸ்ட் மாதம் இடமாற்றம் செய்யப்பட்டு டில்லியில் பணிக்கு அழைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று அவரை சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சிறப்பு விசாரணை குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே அந்தமான் நிகோபார் அரசு புதிய தலைமை செயலராக 1995-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். கேடரான கேசவ் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.

  • Sex is for pleasure, not for having a baby: Famous actress's bold comment உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!