தற்போதைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
கட்டுமான பணி முடிவடைந்து, புதிய நாடாளுமன்றம் தயாராகி விட்டது. வருகிற 28-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஆனால், மக்கள் பணத்தில் கட்டப்பட்டது என்பதாலும், நாட்டின் முதல் குடிமகள் என்பதாலும் ஜனாதிபதி திரவுபதி முர்முதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின.
மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி போன்றவர்கள் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டனர். இதையடுத்து வரும் 28ம் தேதி திறக்கப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை 19 எதிர்கட்சிகள் புறக்கணிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிதாக திறக்கப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்த போது நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் எனவும், நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகர் இருக்கை முன் செங்கோல் நிறுவப்பட உள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்க ஆங்கிலேய அரசு முடிவு செய்த நிலையில், இந்தியாவின் கடைசி ஆளுநராக இருந்த மவுண்ட் பேட்டன் பிரபு, இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன்பாக ஜவஜர்லால் நேருவை அழைத்து, இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப்போகிறோம். அதை எப்படி அடையாளப்படுத்துவது? என்று கேட்டுள்ளார்.
இதையடுத்து நேரு, ராஜாஜியிடம் இதுகுறித்து ஆலோசித்துள்ளார். அப்போது ராஜாஜி, தமிழ்நாட்டில் மன்னர்கள் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, ராஜகுருவாக இருப்பவர் செங்கோலை புதிய மன்னருக்கு கொடுத்து ஆசிர்வதிப்பார். அதேபோல நாமும் ஒரு குருவின் மூலம் செங்கோல் பெற்று, ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களிடம் ஆட்சி கைமாறியதை அடையாளப்படுத்தலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார்.
அந்த யோசனையை ஏற்றுக்கொண்ட நேரு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி கூறியுள்ளார். அதன்படி இந்தியாவின் பழமையான சைவ மடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீன மடத்தின் 20வது குருமகா சன்னிதானமாக இருந்த ஸ்ரீ அம்பலவாண தேசிகரை தொடர்புகொண்ட ராஜாஜி, இந்தியாவின் ஆட்சி மாற்றத்திற்கான புண்ணிய சடங்குகளை செய்துதருமாறும், செங்கோலை நீங்கள் தான் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அந்த சமயத்தில் ஆதீனம் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையிலும், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு பெருமை அளிக்கக்கூடிய அந்த நிகழ்வை செய்ய அவர் முன்வந்தார். அதற்காக சென்னையில் பிரபலமான நகைக்கடையான உம்மிடி பங்காரு செட்டி அண்ட் சன்ஸ் நகைக்கடையில் சைவ சின்னம் பொறித்த தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி செங்கோல் ஒன்று தயாரிக்கப்பட்டது.
தான் காய்ச்சலில் அவதிப்பட்டதால், தனக்கு பதிலாக ஆதீனத்தின் கட்டளை சாமியாக இருந்த சடைச்சாமி என்று அழைக்கப்படும் ஸ்ரீமத் குமாரசுவாமி தம்பிரானை, ஓதுவார்கள் மற்றும் நாதஸ்வர வித்வானுடன் டெல்லிக்கு அனுப்பினார் அம்பலவாண தேசிகர். அவர்கள் விமானத்தில் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.