காரைக்காலில் பரவும் காலரா… அவசர நிலை பிரகடனம் : வாந்தி, பேதியால் அவதிப்படும் மக்கள்… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2022, 6:28 pm

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அதிகரித்து வரும் காலரா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த இருவர் இணைநோய்களால் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரியில் காலரா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பகுதிகளில் சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் எச்சிரிக்கையாக இருக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

அதிகரித்து வரும் காலரா தொற்றை கட்டுப்படுத்த அம்மாநில சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில் மாநிலம் முழுவதும் பொதுசுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கொதிக்கவைத்த தண்ணீர்,கழுவிய காய்கறிகள்,வேகவைத்த உணவுகள் மற்றும் சுத்தமான கழிப்பிடம் ,கைகளை முறையாக கழுவுதல் ஆகிய வழிமுறைகளை பின்பற்ற பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.காரைக்காலில் மட்டும் சும்மா 1589 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், காரைக்காலில் நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்த பின் பள்ளி கல்லூரிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் லெட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி