சனாதனத்தை வேறோடு அறுப்பதா… கோபாலபுர குடும்பமே… உதயநிதி பேச்சுக்கு அண்ணாமலை எதிர்ப்பு.. பரபரப்பு ட்வீட்!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2023, 10:16 am

கிறிஸ்துவ மெஷினரிகள்… உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு : சூடான அண்ணாமலை.. பரபரப்பு ட்வீட்!!!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றம் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்,

“சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம். ஆனால், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது, அனைத்தையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்” என்று பேசியிருந்தார்.

இவரது பேச்சுக்கு வட மாநிலங்களைச் சேர்ந்த நெட்டிசன்கள் சிலர் விமர்சனம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, இதுகுறித்த செய்தி ஒன்றை பகிர்ந்து சட்ட உரிமை கண்காணிப்பகம் என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “நான் எந்த சட்ட சவாலையும் சந்திக்க தயாராக உள்ளேன். இது போன்ற காவி மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியை பின்தொடர்பவர்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் கீழ் சமூக நீதியை நிலைநாட்டுவோம்

இதனை இன்றும் சொல்வேன், நாளையும் சொல்வேன், என்றென்றைக்கும் சொல்வேன். திராவிட மண்ணில் சனாதனத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்தில் இருந்து ஒரு துளி கூட பின்வாங்க மாட்டோம்” என்று கராறாக கூறியிருந்தார்.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரித்துள்ளார். அதாவது “மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைத் தாண்டிச் செல்வத்தைக் குவிப்பதுதான் கோபாலபுரம் குடும்பத்தின் ஒரே நோக்கம். உதயநிதி ஸ்டாலின் அவர்களே நீங்கள், உங்கள் தந்தை, அல்லது உங்கள் இலட்சியவாதிகள் கிறிஸ்தவ மிஷனரிகளிடம் இருந்து வாங்கிய ஐடியாவைக் கொண்டுள்ளீர்கள்.

அந்த மிஷனரிகளின் எண்ணம் உங்களை போன்றவர்கள் தங்களின் தீ சித்தாந்தத்தை வளர்க்க வேண்டும் என்பதே. தமிழகம் ஆன்மிக பூமி. இதுபோன்ற நிகழ்வில் மைக்கைப் பிடித்து உங்கள் விரக்தியை வெளிப்படுத்துவதுதான் நீங்கள் செய்யக்கூடிய சிறந்த செயல்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்!