இங்க இருக்க கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் எல்லாம் நம்மாளுங்க தான் : அமைச்சர் பொன்முடி பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 December 2022, 9:45 pm

விழுப்புரம் தனியார் பள்ளி ஒன்றில், நேற்று இரவு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பொன்முடி கலந்துக்கொண்டார்.

அப்போது பேசிய அவர், எனக்கு எந்த மதத்திலும் என்ன இருக்கிறது என்று தெரியாது. நான் அனைத்திற்கும் அப்பாற்பட்டவன். இன்று இந்தியாவிலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஒரு ஆட்சி, மதவெறியை தூண்டிவிட்டு, அதில் ஆதாயம் தேடலாமா என்று நினைக்கிற இந்த காலகட்டத்தில்.

அதையெல்லாம் மீறி நாம் ஒன்றுபட்டு இருக்கிறோம். நாம் இந்தியர்களாக இருக்கிறோம், தமிழர்களாக இருக்கிறோம், திராவிடர்களாக இருக்கிறோம் என்ற உணர்வை உருவாக்குவது தான் முக்கிய நோக்கம்.

எல்லோரும் முதலியார், செட்டியார், பட்டியல் சமூகத்தவர்களாகத்தான் இருப்பார்கள். உண்மையிலேயே சமூக நீதி வேண்டும் என்று மாறியவர்கள் தான் கிறிஸ்தவ மதத்திற்கு, இஸ்லாமியத்திற்கு மாறினார்கள். இதிலே அந்த சமத்துவம் இல்லை. எனவே தான் தந்தை பெரியார் திராவிட இயக்கத்தை உருவாக்கினார். திராவிடமாக இருந்தாலும், கிறிஸ்துவமாக இருந்தாலும், இஸ்லாமாக இருந்தாலும் எல்லோரும் மனிதர்கள் என்ற அடிப்படை உணர்வை உண்டாக்க வேண்டும் என்பதுதான் தமிழக முதலமைச்சர் சொல்லுகின்ற ‘திராவிட மாடல்’. எல்லோரும் ஒன்று, எல்லோரும் ஓரினம், எல்லோரும் மனிதர்கள். எனவே நாம் அனைவரும் சமத்துவமாக இருக்க வேண்டும், நமக்குள் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது. இதை அப்பொழுதே, 2000 ஆண்டுகளுக்கு முன்பே போதித்தது தான் கிறிஸ்துவம்.

இஸ்லாத்திலும் சில குரூப்ஸ் இருக்கிறது, கிறிஸ்துவத்திலும் அந்த மாதிரி இருக்கிறது. முதலில் நீங்கள் ஒன்றாகுங்கள். இந்துக்களில் அப்படி ஆயிரம் இருக்கிறது… அதை எளிதில் சொல்ல முடியாது. ஆக, எல்லோரும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு மனிதர்கள் என்று ஒருங்கிணைக்க வேண்டும். மகளிர், இப்போது இலவச பேருந்து பயணம் மேற்கொள்கிறார்கள்.

அதில் ஒரு வார்த்தையை கலோக்கியலாக சொல்லிவிட்டதால், நம்மை போட்டு என்னென்னவோ பண்ணிட்டாங்க. நம்மிடையே மத வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், மனிதன் என்ற ஒற்றுமை உணர்வு, மனிதநேயம் எப்போதும் இருக்க வேண்டும்” என்றார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 370

    0

    0