வெளியான சுற்றறிக்கை.. டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு முக்கிய உத்தரவு : அதிர்ச்சியில் பணியாளர்கள்!!
டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க மதுக்களின் விலை பட்டியலை தெரியும் வகையில் வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படியே பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் டாஸ்மாக் முறைகேட்டை தடுக்க, கூடுதலாக வசூலிக்கும் ஊழியர்களுக்கு அபராதம், இடமாற்றம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதனிடையே டாஸ்மாக் ஊழியர்களுக்கு சில முக்கியமான உத்தரவுகளை டாஸ்மாக் நிர்வாகம் பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து கடை விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: மதுபான சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்கள், மதுபானம்,பீர் வகைகளை அரசு நிர்ணயித்தவிலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர் நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்படுவார்.
மேலும், கூடுதல் விலை விற்பனை செய்வதைதடுக்கத் தவறிய, கடை மேற்பார்வையாளர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, கடை விற்பனை மேற்பார்வையாளர், மதியம் 12 மணிமுதல் இரவு 10 மணி வரை பணியில்இருக்க வேண்டும்.
குறிப்பாக, அதிக விற்பனை நேரமான மாலை 5முதல் இரவு 10 மணி வரை அனைத்து கடை மேற்பார்வையாளர்களும் கட்டாயம் கடையில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், முதல்முறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.
இரண்டாவது முறையும் கடையில் இல்லையென்றால், மேற்பார்வையாளர்கள் குறைவான விற்பனை நடைபெறும் டாஸ்மாக் கடைக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள்” இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.