ராஜ்பவனை சுத்தம் செய்யறது தான் ஆளுநரோட வேலை.. அத மட்டும் பார்த்தா போதும் : திமுக எம்பி தயாநிதி மாறன் காட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2023, 10:28 am

ஆளுநரின் வேலையே ராஜ்பவன் மாளிகையை சுத்தமாக வைத்துக் கொள்வது தான் அதை மட்டும் அவர் பார்த்துக்கொண்டால் போதும் என திமுக எம்.பி. தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.

சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அமைந்தகரை மேத்தா நகர் பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திமுக எம்.பி. தயாநிதிமாறன் கலந்து கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறையை வைத்து பயமுறுத்த பார்க்கிறார்கள். அதற்கெல்லாம் பயந்தவர்கள் நாங்கள் அல்ல.

ஆளுநர் என்பவர் ரப்பர் ஸ்டாம்பு தானே. அவருடைய வேலை ஆளுநர் மாளிகையை சுத்தமாக வைத்துக் கொள்வது மட்டுமே. அதைவிட்டு எதற்காக தனக்கு தெரியாத ஒன்றை பேச வேண்டும். அரசியல் செய்வது ஆளுநரின் வேலை கிடையாது.

ஆளுநரின் அரசியல் செய்ய வேண்டும் என நினைத்தால் அவர் தனது பதவியை ராஜினமா செய்துவிட்டு வந்து அரசியல் செய்யட்டும் என தயாநிதிமாறன் ஆவேசமாக கூறினார்.

தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி எப்போது நியமிக்கப்பட்டாரோ அன்று முதல் ஆளுங்கட்சியுடனான மோதல் அதிகரித்து வருகிறது. ஆளுநர் ரவியின் சர்ச்சை பேச்சுக்களுக்கு திமுக தரப்பில் தொடர்ந்து பதிலடி கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…