துப்பில்லாத ஸ்டாலின் அரசு… அட்டைக்கத்திகள் : இதுலயா வீரத்தை காட்டணும் : கொந்தளித்த ஷ்யாம் கிருஷ்ணசாமி!!
Author: Udayachandran RadhaKrishnan19 June 2023, 4:13 pm
தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி சூர்யா. மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர். ட்விட்டர் சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்படும் அவர், தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பதிவு செய்துவருபவர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், ‘கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் என பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கடந்த 16ஆம் தேதி இரவு சரியாக 11.15 மணிக்கு சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்த அவரை காக்கி உடை அணியாமல் வந்த மதுரை போலீசார் கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்திற்கு திமுக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். திமுக அரசு மீது பல்வேறு விமர்சனம் வைத்து வரும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக 4000க்கும் மேற்பட்ட சட்டவிரோத பார்களை நடத்தி கொள்ளை அடித்த ஒருத்தன் மீது கூட வழக்கு பதிவு செய்து கைது செய்ய துப்பில்லாத ஸ்டாலின் அரசு தான், டிவிட்டரில் பதிவு போடும் எதிர்கட்சியினரை கைது செய்து தனது வீரத்தை காட்டுகிறது. அட்டைகத்திகள்.