கும்பாபிஷேகத்தில் CM குடும்பம்.. தருமபுரியில் ஒரு டாக்டர் பைத்தியம் இருக்குமே.. இப்ப அது எங்க போச்சு : திமுக எம்பியை பங்கம் செய்த சூர்யா சிவா!!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2022, 11:35 am

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கீழப்பெரும்ப ள்ளத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இந்த கோவில் முதல்வர் மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குடும்பத்தினருக்கு குலதெய்வ கோயில் ஆகும்.

சிதிலமடைந்த இக்கோவில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகளை கடந்து விட்டதால், இந்த கோயில் புணரமைக்க துர்கா ஸ்டாலின் முன்னிலையில் பல லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்றது.

திருப்பணிகள் நிறைவடைந்து 4 கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 33 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜை பிரமாண்டமாக நடைபெற்றது.
காலை யாகசாலை பூஜை நிறைவடைந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்கள் முழங்க புறப்பட்டது. இதில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், அவரது மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், ஸ்டாலின் மைத்துனர் டாக்டர் ராஜமூர்த்தி மற்றும் அவர்களது குடும்பத்தினர் புனித நீர் அடங்கிய கடங்கள் முன்பு கோவிலை வலம் வந்தனர்.

பிறகு கோவில் விமான கலசம், ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்கள் சன்னதி கலசங்களில் துர்கா ஸ்டாலின் பச்சைக் கொடியை அசைத்து காட்டிட புனித நீர் சிவாச்சாரியார்களால் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மேலும் இந்த விழாவில் அமைச்சர் மெய்யநாதன், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம்,கலெக்டர் லலிதா ஆகியோர் கலந்துகொண்டனர். நெட்டிசன்கள் பலரும் இந்த புகைப்படங்களை பகிர்ந்து பகுத்தறிவுக்கு வந்த சோதனை, இதுதான் சுயமரியாதை கற்றுக்கொடுத்த இயக்கமா ? என்று பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இதனிடையே ட்விட்டரில் CM குடும்பத்தினர் பங்கேற்ற கும்பாபிஷேக வீடியோவை நகைச்சுவையாக எடிட் செய்து பதிவிட்ட பாஜக பிரமுகர் சூர்யா சிவா, படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்று ஒரு பழமொழி உண்டு.

தர்மபுரியில ஒரு டாக்டர் பைத்தியம் இருக்குமே தேவையில்லாததெல்லாம் பேசுமே இப்ப எங்க போச்சு அது .. இதுதான் திராவிடமாடலா என பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி