திமுகவால் முடியுமா..? எனக் கேள்வி எழுப்பியவர்களுக்கு தக்க பதிலடி ; காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து CM ஸ்டாலின் கருத்து..!!

Author: Babu Lakshmanan
5 April 2024, 7:53 pm

காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இண்டியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

தேர்தல் அறிவிக்கப்பட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

மேலும் படிக்க: ‘நாங்க, என்ன உங்க வீட்டு குப்பையா..?’ எங்களை ஒன்னும் பண்ண முடியாது ; பிரதமர் மோடிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்..!!!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு ;- நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும். 2025ம் ஆண்டு முதல் மத்திய அரசு பணிகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். நீட் தேர்வு மாநிலங்களின் விருப்பமாக்கப்படும். 2024 மார்ச் மாதம் வரையில் பெறப்பட்ட கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, அடிமை அதிமுக அடகு வைத்த, பாசிச பாஜக பறித்த தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க #Vote4INDIA. நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி, மாநிலக் கட்சியான தி.மு.க.வால் நிறைவேற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்பியோருக்கான தக்க பதிலாக அமைந்துள்ளது காங்கிரஸ் வெளியிட்டுள்ள 2024 தேர்தல் அறிக்கை. அதனால்தான் சொல்கிறோம்! இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கையால் ஒன்றிய கூட்டணி!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 264

    0

    0