இது வேண்டுகோள் இல்ல… கட்டளை… கருணாநிதி வரலாற்றை கவிதையாக தர வேண்டும் ; கவிஞர் வைரமுத்துவுக்கு CM ஸ்டாலின் கோரிக்கை

Author: Babu Lakshmanan
1 January 2024, 9:52 pm

கருணாநிதியின் வரலாற்றை கவிதையாக வழங்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்துவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அன்பு கட்டளை போட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதிப், முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அந்த நூலை வெளியிட்டார். முதல் பிரதியை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது:- கருணாநிதியின் வரலாற்றை வைரமுத்து கவிதையாக தர வேண்டும். ஒரு ரசிகனாக இது என்னுடைய வேண்டுகோள். இன்னும் சொல்லப்போனால் கட்டளை. வைரமுத்து கவிதை எழுதிகொண்டே இருக்க வேண்டும். அதை நான் பெற்று கொண்டே இருக்க வேண்டும்.

மண்ணியல், விண்ணியல் மாற்றத்தை பொருட்படுத்தாவிடில் ஐம்பூதங்களும் எதிராய் மாறிவிடும் என்கிறார் கவிஞர். மண், நீர், காற்று, வானம் மாசு அடைந்துள்ளதால் சுற்றுச்சூழல் மாறியுள்ளது. கவிஞர் வைரமுத்துவின் மொழி ஆளுமை இந்த நூலில் வெளிப்படுகிறது. படைப்பு, புத்தகத்தை தரமாக தயாரிப்பதில் வைரமுத்து கண்ணும் கருத்துமாக இருப்பார், என தெரிவித்துள்ளார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 329

    0

    0