சென்னை : மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்புப் பணியின் போது மாரடைப்பால்
உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் நாட்ராயன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டம், வடக்கிப்பாளையம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய திரு.நாட்ராயன் அவர்கள், மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்புப் பணியில் இருந்தபோது. கடந்த 19-4-2022 அன்று, இரவு சுமார் 10.30 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இந்த செய்தியை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர்
நாட்ராயன் அவர்களின் குடும்பத்தாருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, உடனடியாக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…
இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…
சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…
துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…
தவெக தலைவர் விஜய் எங்களுக்கு ஆதரவளித்தால், நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்பதில் எந்தத் தவறுமில்லை என 2013 ஆசிரியர் தகுதித்…
This website uses cookies.