மாநிலத்தை மட்டுமல்ல… மண்ணை காக்கும் வேளாண் பட்ஜெட்… முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்..!!
Author: Babu Lakshmanan19 March 2022, 6:07 pm
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் முதல்முறையாக வேளாண்துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் உள்ள அம்சங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- உழவர் பெருமக்களின் உள்ளம் மகிழத்தக்க வகையில் வேளாண்மைக்கு எனத் தனி நிதிநிலை அறிக்கையை கடந்த ஆண்டுமுதல் தாக்கல் செய்து வருகிறோம்.
இதனால் தமிழ்நாட்டில் பாசனப் பரப்பும் விளைச்சலும் அதிகம் ஆகியுள்ளது. உழவர் பெருமக்கள் மகிழ்க்சி அடைந்தார்கள். அத்தகைய மகிழ்ச்சிமின் தொடர்ச்சியாக இந்த தாக்கல் செய்துள்ள அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது பாராட்டுதல்கள்.
அனைத்துத் துறைகளும் சமமாக வளர வேண்டும் என்றாலும், வேளாண்மைத் துறை என்பது அதிகமாக வளர்ந்தாக வேண்டும். வேளாண்மை என்பது தொழில் மட்டுமல்ல; அது வாழ்க்கை, பண்பாடு தொடர்புடையது ஆகும்.
உழவர்களின் வருமானத்தை உயர்த்துவது, மாற்றுப்பயிர்களை அறிமுகம் செய்வது, இயற்கை இடர்பாடுகளில் இருந்து காப்பது, இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல், பாசன நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, வேளாண்மையை
நவீனப்படுத்தி, லாபம் தரும் தொழிலாக மாற்றுவது !
உழவர் பெருமக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்து, உங்களுக்குப் பின்னால் இந்த அரசாங்கம் இருக்கிறது என்ற உந்துசக்தியை இந்த அறிக்கை கொடுத்துள்ளது.
வேளாண்மைக்கு என இந்த ஆண்டு 33 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டம், ஆதிதிராவிடர் பழவ்குடியின சிறுகுறு விவசாயிகளுக்கு இயந்திரமாக்கல், உணவுப் பதப்படுத்தலுக்கு முன்னுரிமை ஆகியவை
காவிரி டெல்டா மாவட்டங்களில் 4,964 கி.மீட்டர் நீளமுள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட உள்ளது. உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க 65,167 கேடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உழவர்களுக்கு இடுபொருட்கள் எடுத்துச் செல்ல பஞ்சாயத்துகளுக்குப் பணம் தரப்பட உள்ளது. வணிக வங்கிகள், கூட்டுதவு வங்கிகள் முற்றும் கிராம வங்கிகள் மூலம் தமிழ்தாட்டு உழவர்களுக்கு, ரூ.1,83,425 கோடி வேளாண்கடன் வழங்கப்படுவதை இத்துறை கண்காணிக்க இருக்கிறது.
90 பக்க அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு திட்டமும், இந்த மாநிலத்தில் வாழும் லட்சக்கணக்கான உழவர் பெருமக்களுக்கு ஏதாவறு, ஒரு வகையில் உதவி செய்வதாக உள்ளது.
வான்புகழ் கொண்ட வள்ளுவரின் கனவை நிறைவேற்றும் வகையிலும், வானத்தை நம்பி வாழும் உடழவர் பெருமக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும்.
இந்த நிதிநிலை அறிக்கை மாநிலத்தை மட்டுமல்ல, மண்ணையும் காக்கும் அறிக்கையாக அமைந்துள்ளது. மக்களையும் காப்போம்! இந்த மாநிலத்தையும் காப்போம்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.
0
0