பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் கோவை வந்தார். அவருக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக் Ex Mla, ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலையில் பல ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அமைச்சர் முத்துச்சாமி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திருப்பூர் மாவட்டம் செல்வராஜ் எம்எல்ஏ, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த கோவை தங்கம், கடந்த அக்டோபர் 12ஆம் தேதி உயிரிழந்தார். சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறுவதற்காக வந்துள்ளார்.
கோவை தங்கம் கடந்த மார்ச் 2021ல் திமுகவில் இணைந்தார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.இருவருக்கும் திருமணமாகி விட்டது. கோவை தங்கம் கடந்த அக்டோபர் 12-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். வால்பாறை சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை பணியாற்றியவர். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
This website uses cookies.