ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருஷம் ஆச்சு.. ரம்ஜான், கிறிஸ்துமஸுக்கு வாழ்த்து சொல்லும் CM ஸ்டாலின்… தீபாவளிக்கு… வம்புக்கு இழுக்கும் பாஜக..!!

Author: Babu Lakshmanan
10 October 2022, 9:07 pm

இந்து வழிபாட்டு முறைகளுக்கு எதிராக பேசியதால் இந்துக்கள் கொதித்தெழுந்து விமர்சிப்பதால், தமிழக அரசியலில் மூச்சு திணறிக்கொண்டிருப்பது திமுக தான் என்று பாஜக மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு அட்வைஸ் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், பாஜகவையும் வெளுத்து வாங்கினார். அவர் கூறியதாவது :- நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற எதையும் செய்யும் பாஜக. எந்த கீழ்தரமான அரசியலுக்கும் போவாங்க. மதத்தை, ஆன்மிக உணர்வை தூண்டி அரசியல் செய்ய பார்க்கிறது பாஜக. அரசியலையும், ஆன்மிகத்தையும் எப்போதும் இணைக்காதவர்கள் தமிழக மக்கள் என்பதால்தான் தமிழ்நாட்டில் மூச்சு திணறுகிறது பாஜக’ என்று பாஜகவை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

Stalin - Updatenews360

முதல்வர் ஸ்டாலினின் இந்த கருத்துக்கு பாஜகவினர் வரிசையாக திமுக மீது குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற எதையும் செய்யும் பாஜக.எந்த கீழ்த்தரமான அரசியலுக்கும் போவார்கள் பாஜகவினர். தங்களது சாதனைகளை சொல்வதற்கு ஏதுமில்லாத காரணத்தினாலே நம்மை பற்றி அவதூறு செய்து அரசியல் நடத்துகிறது பாஜக. மதத்தை,ஆன்மீக உணர்வுகளை தூண்டி விட்டு அரசியல் நடத்த பார்க்கிறது. அரசியலையும் ஆன்மீகத்தையும் எப்போதும் இணைக்காத மக்கள் தமிழ் மக்கள் என்பதால் மூச்சு திணறிக்கொண்டிருக்கிறது பாஜக என்று மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.

Bjp narayanan thirupathi - updatenews360

எந்த மொழியில் திமுக பேசுகிறதோ அதே மொழியில் பாஜக பேசவேண்டியது கட்டாயம். பாஜக வின் மக்கள் நல மற்றும் கட்டமைப்பு திட்டங்களினால் தான் தமிழக அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது. தனக்கென எந்த வருவாய் ஈட்டும் திட்டங்களையும் இந்த ஒன்றரை வருடத்தில் திமுக அரசு முன்னெடுக்கவில்லை. ரம்ஜானுக்கும், கிறுஸ்துமஸுக்கும் வாழ்த்து சொல்லும் முதல்வர் , தீபாவளிக்கும் மற்ற ஹிந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லாமல் இருப்பதோடு, ஹிந்து நகர்ந்து கொண்டிருக்கிறது.

தனக்கென எந்த வருவாய் ஈட்டும் திட்டங்களையும் இந்த ஒன்றரை வருடத்தில் திமுக அரசு முன்னெடுக்கவில்லை. ரம்ஜானுக்கும், கிறுஸ்துமஸுக்கும் வாழ்த்து சொல்லும் முதல்வர் , தீபாவளிக்கும் மற்ற ஹிந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லாமல் இருப்பதோடு, ஹிந்து நம்பிக்கைகளுக்கு எதிராக, ஹிந்து வழிபாட்டு முறைகளுக்கு எதிராக பேசியதால் ஹிந்துக்கள் கொதித்தெழுந்து விமர்சிப்பதால், தமிழக அரசியலில் மூச்சு திணறிக்கொண்டிருப்பது திமுக தான் என்பதை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

  • Anirudh updates on Vidamuyarchiஅனிருத் வெளியிட்ட “விடாமுயற்சி” மாஸ் அப்டேட்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
  • Views: - 436

    0

    0