2 ஆண்டுகளில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. ரூ.500 கோடியில் வளர்ச்சிப் பணிகள் : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
21 January 2022, 2:18 pm

சென்னை : மதுரை மாவட்டத்தில்‌ ரூ.51.77 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்‌ பணிகளை திறந்து வைத்து, ரூ.49.74 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்‌ நாட்டி, பயானிகளுக்கு ரூ.219 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ ‌ வழங்கினார்‌.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- சென்னை தலைமைச்‌ செயலகத்திலிருந்து காணொலிக்‌ காட்சி வாயிலாக மதுரை மாவட்டத்தில்‌ 51 கோடியே 77 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ முடிவுற்ற திட்டப்‌ பணிகளை திறந்து வைத்து, 49 கோடியே 74 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்படவுள்ள புதிய திட்டப்‌ பணிகளுக்கு அடிக்கல்‌ நாட்டி, 67,831 பயனாளிகளுக்கு 219 கோடி ரூபாய்‌ மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்‌. திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்‌ பணிகளின்‌ விவரங்கள்‌ மதுரை அரசு மருத்துவக்‌ கல்லூரி வளாகத்தில்‌ 41 கோடியே 24 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுள்ள 6 தளங்களைக்‌ கொண்ட கல்வியியல்‌ கூடம்‌ மற்றும்‌ 5 தளங்களை கொண்ட குடியிருப்புக்‌ கட்டடம்‌; மதுரை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ 5 கோடியே 68 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்துறை ஒருங்கிணைந்த அலுவலகக்‌ கட்டடம்‌;

நகராட்சி நிர்வாகத்‌ துறை சார்பில்‌ மதுரை மாநகராட்சி அலுவலகத்தில்‌ 2 கோடியே 45 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, வரவேற்பு அறை மற்றும்‌ இதர கட்டடங்கள்‌; பள்ளிக்‌ கல்வித்‌ துறை சார்பில்‌ 2 கோடியே 11 இலட்சத்து 23 ஆயிரம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ அமைக்கப்பட்டுள்ள வகுப்பறைகள்‌, ஆய்வுக்‌ கூடங்கள்‌,
நூலகங்கள்‌, கழிப்பறை மற்றும்‌ குடிநீர்‌ வசதிகள்‌;

சமூகநலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறை சார்பில்‌ 29 இலட்சத்து 9 ஆயிரம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ பாப்பாப்பட்டி, கருப்பட்டி, அரசப்பட்டி ஆகிய பஞ்சாயத்திற்குட்பட்ட இடங்களில்‌ கட்டப்பட்டுள்ள 3 அங்கன்வாடி மையக்‌ கட்டடங்கள்‌; என மொத்தம்‌ 51 கோடியே 77 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ முடிவுற்ற திட்டப்பணிகளை மாண்புமிகு முதலமைச்சர்‌ ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

அடிக்கல்‌ நாட்டப்பட்டுள்ள திட்டப்பணிகளின்‌ விவரங்கள்‌

நகராட்சி நிர்வாகத்துறை சார்பில்‌ மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ 16 கோடியே 16 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ மூன்று இடங்களில்‌ கட்டப்படவுள்ள நகர பொது நல ஆய்வகங்கள்‌ மற்றும்‌ 62 நகர்ப்புர நல மற்றும்‌ நோய்‌ எதிர்ப்பு மையங்கள்‌, மதுரை மாநகராட்சி அலுவலகம்‌ தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு 3 கோடியே 50 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ அறிஞர்‌ அண்ணா மாளிகை புதுப்பிக்கும்‌ பணி மற்றும்‌ மதுரை காந்தி மியூசியம்‌ அருகில்‌ 2 கோடியே 50 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்படவுள்ள அறிவுசார்‌ மையம்‌ மற்றும்‌ நூலகக்‌ கட்டடம்‌;

நமக்கு நாமே திட்டத்தின்‌ கீழ்‌, மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ‌2 கோடியே 25 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ அமைக்கப்படவுள்ள சலவைக்‌ கூடங்கள்‌ மற்றும்‌ வாகன நிறுத்துமிடம்‌;மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்துறை சார்பில்‌ தோப்பூரில்‌ அமைந்துள்ள தொழுநோய்க்கான அரசு மருத்துவமனையில்‌ 10 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்படவுள்ள தொற்று நோய்க்கான சிகிச்சை மற்றும்‌ தனிமைப்படுத்துதல்‌ சிறப்பு மருத்துவமனை; மேலூர்‌ அரசு மருத்துவமனையில்‌ ஒரு கோடியே 21 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்படவுள்ள அவசர சிகிச்சைக்கான ஒருங்கிணைந்த கட்டடம்‌; சமயநல்லூரில்‌ அமைந்துள்ள 41117 பயிற்சி பள்ளியில்‌ 1 கோடியே 75 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்படவுள்ள தங்கும்‌ விடுதிக்‌ கட்டடம்‌;

சமயநல்லூரில்‌ அமைந்துள்ள சுகாதாரம்‌ மற்றும்‌ குடும்பநல பயிற்சி மைய இரண்டாவது தளத்தில்‌ 1 கோடியே 50 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்படவுள்ள கூடுதல்‌ பயிற்சிக்‌ கட்டடம்‌; சமயநல்லூரில்‌ அமைந்துள்ள ஆரம்ப சுகாதார மைய கட்டடத்தில்‌ 1 கோடியே 45 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்படவுள்ள அவசர சிகிச்சைக்கான கட்டடம்‌;

வில்லாபுரம்‌ நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்‌ ரூபாய்‌ 43 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ விரிவாக்கப்‌ பணி; அவனியாபுரம்‌ நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்‌ 99 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்படவுள்ள புதிய கட்டடம்‌ என மொத்தம்‌ 49 கோடியே 74 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்படவுள்ள புதிய திட்டப்‌ பணிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர்‌ அடிக்கல்‌ நாட்டினார்‌.

கூட்டுறவு உணவு மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ துறை, உள்ளிட்ட பல்வேறு துறையின் கீழ் மொத்தம்‌ 67,831 பயனாளிகளுக்கு 219 கோடி ரூபாய்‌ மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ வழங்கினார்கள்‌.

  • Nayanthara disrespecting Allu Arjun viral video பிரபல தெலுங்கு நடிகரை அசிங்கப்படுத்திய நயன்தாரா..வைரலாகும் வீடியோ..தனுஷை கொண்டாடும் ரசிகர்கள்..!
  • Views: - 10291

    0

    0