மாணவர்களோடு அமர்ந்து பாடத்தை கவனித்த முதலமைச்சர் ஸ்டாலின் : அமைச்சரின் கோரிக்கையை ஏற்று வகுப்பறையில் நடந்த சுவாரஸ்யம்…!!
Author: Babu Lakshmanan13 June 2022, 1:02 pm
திருவள்ளூர் : திருவள்ளூரில் அரசு பள்ளியில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், 10ம் வகுப்பு மாணவர்களுடன் இருக்கையில் அமர்ந்து பாடத்தை கவனித்தார்.
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 1 முதல் 9 வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. ஆண்டு இறுதித்தேர்வுக்கு பிறகு பள்ளிக்கு திரும்பும் மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் வடகரையில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 10ம் வகுப்பு மாணவர்களுடன் ஒரே இருக்கையில் அமர்ந்து தமிழ் ஆசிரியை நடத்தும் பாடத்தை கவனித்தார்.
முதலமைச்சருடன் சேர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸும் மாணவர்களுடன் இருக்கையில் அமர்ந்து பாடத்தை கவனித்தார்.