மாநில மற்றும் மொழி உரிமை காக்க தொடர்ந்து பாடுபடுவோம் : தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
Author: Babu Lakshmanan11 April 2022, 10:43 am
சென்னை : திராவிட மாடல் ஆட்சியின் தாக்கமும், வீச்சும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக உள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்துக்கு மாற்றாக இணைப்பு மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்தக் கருத்திற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், மற்றொரு தரப்பு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாநில உரிமை மற்றும் மொழி உரிமை காக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மாநில உரிமை, மொழி உரிமை காக்க கண்ணும் கருத்துமாக திமுகவினர் தொடர்ந்து பாடுபடுவோம். தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம், அதன் தாக்கத்தை பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம். இந்திய ஒன்றியத்தில் எவராலும் தவிர்க்க முடியாத இயக்கம் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்போம். தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ்நாடு ஆகிய மூன்றின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு திமுக பயணிக்கிறது, என்று அதில் தெரிவித்துள்ளார்.
0
0