நியூட்ரினோ திட்டத்தை உடனடியாக நிறுத்துங்க : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

Author: Babu Lakshmanan
14 March 2022, 3:29 pm

நியூட்ரினோ திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்படும் சம்பல் குட்டக்குடி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. மலை உச்சியில் 1000 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் தோண்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பாறை சரிவு, மலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஏற்கனவே 2021 ஜூன் 17 இல் இதுதொடர்பான இது தொடர்பாக மனு அளித்துள்ளது. நியூட்ரினோ திட்டத்தால் தேனி பொட்டிபுரம் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். குறிப்பாக வனப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்படும். இயற்கை கட்டமைப்பு சிதைவுகளும் விவகாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பே முக்கியம் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கக் கூடாது. நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இதுகுறித்து அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கும், வன விலங்குகள் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படுத்தும் நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும், என தெரிவித்துள்ளார்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!