மகளிருக்கான உதவித் தொகை ரூ.1000 எப்போது வழங்கப்படும் தெரியுமா..? பிரச்சாரத்தின் போது முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!!

Author: Babu Lakshmanan
25 February 2023, 11:50 am

தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட மகளிருக்கான உதவித் தொகை ரூ.1000 தொடர்பான முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் சம்பத் நகரில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :- கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு. சம்பத் நகரில், ஈ.வி.கே.எஸ். சம்பத் மகனுக்கு வாக்கு சேகரித்து கலைஞர் மகன் வந்துள்ளேன். திமுகவின் அடித்தளமே ஈரோடு தான், மகனின் கடமையை செய்து முடிக்க தந்தை வந்துள்ளார்.

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்றார். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவுக்கு உங்கள் ஆதரவு இருக்க வேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே எனது லட்சியம், எனக் கூறினார்.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 563

    0

    0