இயக்குநர் பாரதிராஜாவை சந்தித்தார் முதலமைச்சர் ஸ்டாலின் ; உடல்நலம் குறித்து விசாரித்தார்..!!

Author: Babu Lakshmanan
10 September 2022, 12:39 pm

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் பாரதிராஜா. தற்போது, வயது மூப்பு காரணமாக திரைப்படங்களை இயக்குவதை விட்டுவிட்டு, குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியாகிய திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாத்தாவாக பாரதிராஜா நடித்திருந்தார். இவரது நடிப்பு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனிடையே, கடந்த ஆக.,23ம் தேதி ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, இயக்குநர் பாரதிராஜா தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜாவின் உடல்நிலை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மற்றும் மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர். இதைத் தொடர்ந்து, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பெற்று இல்லம் திரும்பிய இயக்குநர் பாரதிராஜாவை சென்னை நீலாங்கரை இல்லத்தில் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 438

    0

    0