தொழில்துறையில் வேகமாக முன்னேறும் தமிழகம்… சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்..!!
Author: Babu Lakshmanan19 April 2022, 2:05 pm
சென்னை : தமிழகம் தொழில்துறையில் வேகமாக முன்னேறி வருவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க என்ன நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பிய அதிமுக எம்எல்ஏ கேபி முனுசாமி, அதிமுக காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூறினார்.
இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்து பேசியதாவது :- தொழில் துறையை பொறுத்தவரை தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறி வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து புதிய அன்னிய முதலீடுகள், புதிய முதலீடுகளை பெற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்ந்து போடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆட்சிக்கு வந்து 10 மாதங்களில் மட்டும் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 69 ஆயிரத்து 375 கோடியே 54 லட்சம் ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளோம். புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டிருக்கிறது. புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தை தொழில்துறை மாநிலமாக உருவாக்குவதன் மூலம் தமிழகத்தின் தொழில் முதலீடுகளை பத்திரிகைகள் பாராட்டியுள்ளன.
தொழில் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் அமைச்சர்களுக்கும், தொழில் துறையினருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.
0
0