சென்னை : அமைச்சரிடம் கலகத் தலைவன் படத்தை பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் ரிவ்யூ கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படமான கலகத் தலைவன் கடந்த 18ம் தேதி வெளியானது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் போட்டியாளரான ஆரவ் மற்றும் கலையரசன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
வித்தியாசமான திரில்லர் படமாக இருப்பதாக கூறப்படும் கலகத் தலைவன் படத்துக்கு கலெக்ஷன் குவிந்து வரும் நிலையில், பாராட்டுக்களும் கிடைத்து வருகிறது.
படம் ரிலீசுக்கு முந்தைய நாள் முதலமைச்சரும், உதயநிதி ஸ்டாலினின் தந்தையுமான ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் இப்படத்தின் ஸ்பெஷல் ஷோவை பார்த்தார். படம் பார்த்து முடித்ததும் அருமையாக இருப்பதாக இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் உதயநிதிக்கு பாராட்டுக்களை தெரிவித்து படம் வெற்றி பெற வாழ்த்தி இருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இன்று காலை நடைபயிற்சி செய்த முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சரிடம் கலகத் தலைவன் படம் எப்படி இருக்கிறது என கேட்டுள்ளார். அதற்கு, அவர் ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்லி, படம் குறித்த தனது கருத்தை முதலமைச்சரிடம் விளக்குகிறார்.
அமைச்சரிடம் கலகத் தலைவன் படத்தை பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் ரிவ்யூ கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே, மக்கள் வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருக்கும் போது முதலமைச்சர் ஸ்டாலின், தனது மகன் நடித்த கலகத் தலைவன் படத்தை பார்த்து குதூகலித்து வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், அமைச்சரிடம் கலகத் தலைவர் படம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ரிவ்யூ கேட்டதற்கு, என்ன கமெண்ட்ஸ் வரப்போகிறதோ…? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.