எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது… பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் : முதலமைச்சர் ஸ்டாலின்

Author: Babu Lakshmanan
12 April 2024, 12:34 pm

‘சிலரைச் சில காலம் ஏமாற்றலாம், எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது என்று பாஜகவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- புகழ்பெற்ற LoknitiCSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

மேலும் படிக்க: பெங்களூரூ குண்டுவெடிப்பு… முக்கிய குற்றவாளிகள் மேற்குவங்கத்தில் கைது ; என்ஐஏ அதிரடி..!!

அதில், 27% பேர் #Unemployment-தான் முக்கியப் பிரச்சினை என்றும், 23% பேர் விலைவாசி உயர்வு என்றும், 55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை என்றும் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க: வரலாறு காணாத புதிய உச்சம்… ஒரே நாளில் ரூ.640 உயர்வு.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இதில் இருந்தே இந்த பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது. அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், பத்தாண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்.

‘சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 294

    0

    0