CM ஸ்டாலின் பதவி விலகச் சொல்லுங்க.. கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்கணும் : ஆளுநரிடம் இபிஎஸ் வலியுறுத்தல்!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2024, 4:18 pm

கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கள்ளக்குறிச்சியின் மையப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடந்ததால் 60 பேர் உயிரிழந்துள்ளனர் 150 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் பலர் அபாய கட்டத்தில் உள்ளதாக தகவல் வந்துள்ளது என தெரிவித்தவர்,

செங்கல்பட்டு மற்றும் மரக்காண கள்ளச்சாராய உயிர் இழப்பின் போது தமிழகத்தில் இனி கள்ளச்சாராய கலாச்சாரமே இருக்காது இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படும் என தெரிவித்தார் ஆனால் கள்ளக்குறிச்சி மரணம் மிகவும் மோசமானது.

கள்ளக்குறிச்சி நகரத்தின் மையப் பகுதியிலேயே நீதிமன்றம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்டவை உள்ளது அதன் அருகிலேயே கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வந்துள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் யாரும் கள்ளச்சாராயம் குடித்து இறக்கவில்லை என கூறியதன் விளைவாகவே அடுத்துள்ளவர்கள் கலாச்சாராயம் குடித்துள்ளனர்.

அதனால் இதற்கு முழு பொறுப்பு தமிழக அரசு தான் ஏற்க வேண்டும் தார்மீக பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

சிபிசிஐடி விசாரணை என்பது நியாயமான முறையில் நடக்காது என்பதற்காகவே சிபிஐ விசாரணை நாங்கள் கேட்கிறோம் சிபிஐ இடம் இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டும் கள்ளச்சாராயம் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகிறது என்றால் ஆளுங்கட்சியின் துணை இல்லாமல் விற்பனை செய்ய முடியாது அதனால் ஆளுங்கட்சி துணையோடு தான் இந்த விற்பனை நடைபெற்றுள்ளது.

முதலமைச்சர் போதை ஒழிப்பு தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை தலைமைச் செயலகத்தில் நடத்துகிறார் ஆனால் அதனை முறையாக நடைமுறைப்படுத்தியிருந்தால் இதனை தடுத்திருக்க முடியும் தற்பொழுது தமிழகம் போதைப் பொருள்களின் கேந்திரமாக விளங்குகிறது இன்றைக்கு கள்ளச்சாராயத்தை கண்டுபிடித்து அழித்து வருகிறார்கள் இதனை முன்பே செய்திருந்தால் இம்மாதிரியான மரணங்கள் ஏற்பட்டிருக்காது.

கலாச்சாராயம் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் காத்திருக்க முடியாது அதனால் கட்டாயம் வனத்துறை அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

என் மீது ஆர் எஸ் பாரதி தொடர்ந்த வழக்கு சிபிஐ விசாரணை கூறியது அல்ல அவர் தொடர்ந்த வழக்கை நான் தொடர்ந்து நடத்துவேன் நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன்.

தமிழக அமைச்சரவையில் தகுதியே இல்லாத ஒரு அமைச்சர் என்றால் அது மா. சுப்பிரமணியம் தான் அதனால்தான் அவர் அடிக்கடி வாங்கி கட்டி கொள்கிறார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க தவறிய அமைச்சர் மா. சுப்பிரமணியம் தான் ராஜினாமா செய்ய வேண்டும்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிமுக பிரமுகர் கள்ளசாராய விவகாரத்தில் ஈடுபட்டார் என்ற தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
அவர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் பின்பு அதிமுகவில் இருந்தும் விலகி விட்டார். தற்போது கட்சியிலே இல்லை.

இந்த விவகாரம் அதிமுகவை தொடர்புபடுத்தி பேசினால் அவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம். எந்த கட்சியை சார்ந்தவர்கள் இந்த கள்ளசாராய விவகாரத்தில் ஈடுபட்டு இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
இது கட்சி சார்ந்த விஷயம் இல்லை என தெரிவித்தார்.

  • valaipechu bismi said the reason behind empuraan movie re censor on sudden விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்