PTR ஆடியோ விவகாரம்… மட்டமான அரசியல் ; பாஜகவுக்கு ரிப்ளை கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்!!

Author: Babu Lakshmanan
2 May 2023, 10:15 am

சென்னை ; ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் செய்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போன்ற ஆடியோ தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதி ஸ்டாலினும், முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் ஒரே வருடத்தில் ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாரித்ததாக அந்த ஆடியோவில் கூறியது திமுகவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக கேள்வி எழுப்பி வருகின்றன. எனினும், இந்த ஆடியோ பொய்யானது என்று பழனிவேல் தியாகாரஜன் விளக்கம் அளித்து இருந்தார்.

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் நடப்பதாகவும், இதில் யாருக்கும் விளம்பரம் தேடி கொடுக்க விரும்பவில்லை என்று உங்களில் ஒருவன் நிகழ்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது.

இந்த நிலையில், நேற்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினையும் சந்தித்து பிடிஆர் பழனிவேல் தியாகரஜன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 395

    0

    1