29C பஸ்ஸை மறக்க முடியுமா..? Flash Back-ஐ சொல்லி சட்டப்பேரவையில் நெகிழ்ந்து போன முதலமைச்சர் ஸ்டாலின்..!!!
Author: Babu Lakshmanan7 May 2022, 11:43 am
சென்னையில் குறிப்பிட்ட வழித்தடத்தில் இயங்கும் பேருந்தின் எண்ணை குறிப்பிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்து விட்டது. இதையொட்டி, இன்று காலையிலேயே முதலமைச்சர் ஸ்டாலின், கோபாலபுரத்தில் இருந்து மெரினாவில் உள்ள முன்னாள் திமுக தலைவரும், தந்தையுமான கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
பின்னர், அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், ராதாகிருண்ணன் சாலையில் தனது காரை நிறுத்தச் சொல்லி, அங்கிருந்த பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அந்த வழியாக வரும் ஏதேனம் ஒரு பேருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஏறிச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 29C பேருந்திற்காக காத்திருந்து, அதில் ஏறி, மக்களோடு மக்களாக பயணித்தார். அப்போது, பேருந்தில் பயணிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து, . திமுக ஆட்சி ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு சட்டமன்றத்தில் உரையாற்றினார் முதலமைச்சர்.
அப்போது தனது உணர்வுகளை பகிர்ந்துகொண்ட அவர், “என் வாழ்வில் 29சி பேருந்தை மறக்க முடியாது. 29C பேருந்தில் ஏறி தான் பள்ளிக்கு சென்று படித்தேன். பேருந்தில் பயணம் செய்த மக்களிடம் ஆட்சி திருப்தியாக இருக்கிறதா? என்று கேட்டறிந்தேன்” எனக் குறிப்பிட்டார். அவரது பேச்சைக் கேட்டு திமுக உறுப்பினர்கள் நெகிழ்ந்து போகினர்.
0
0