முதலமைச்சரின் வருகைக்காக அவசர அவசரமாக போடப்பட்ட சாலை… மாட்டிக்கொண்ட பேருந்து… பொதுமக்கள் அவதி..!!

Author: Babu Lakshmanan
1 July 2022, 4:31 pm

கரூரில் ஸ்டாலின் வருகைக்காக அவசர அவசரமாக போடப்பட்ட சாலையில் பேருந்து மாட்டிக்கொண்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

பல்வேறு நலத்திட்டம் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் வருகை தர உள்ளார். அவரது வருகையையொட்டி, கரூரிலிருந்து தாந்தோணி மலை செல்லும் சாலையை நெடுஞ்சாலை துறையினர் அவசர அவசரமாக சாலை அமைத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, நேற்று இரவு தான்தோன்றிமலை அருகில் உள்ள ரியல் கோட்ச் அருகே அமைக்கப்பட்ட இருந்த சாலையில், தனியார் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று மாட்டி கொண்டது.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகாததால் அனைத்து வேலையாட்களும் கீழே இறக்கி விடப்பட்டனர். பின்பு காவல்துறையினர் பேருந்தை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.

மேலும், முதல்வர் வருகைக்காக அவசர அவசரமாக போடும் சாலையை தரமற்ற முறையில் போடுவது கண்டிக்கத்தக்கது என்றும், முதலமைச்சரின் வருகைக்காக அல்லாமல், இந்த சாலையை முன்பே தரமான முறையில் போட்டிருந்தால், மக்களின் பயன்பாட்டிற்காவது ஆகியிருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!