பொட்டி பொட்டியா வாங்குன CM ஸ்டாலினுக்கு பொட்டி சாவி எங்க இருக்குனு தெரியல… எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

பொட்டி பொட்டியா வாங்குன CM ஸ்டாலினுக்கு பொட்டி சாவி எங்க இருக்குனு தெரியல… எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

தர்மபுரி மாவட்டம் அரூரில் கொங்கு பல்நோக்கு பயிற்சி இயக்கம் திறப்பு விழா இன்று நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பயிற்சியகத்தை திறந்து வைத்து அவர் பேசுகையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த மாணவர்களை உயர்த்த தொடங்கப்பட்டுள்ளது. இந்த சங்கம் தொடங்கி இன்று வெள்ளி விழா கண்டுள்ளது.

இந்த கங்கத்தின் மூலமாக உயர்ந்த கல்வி படிப்பதற்காக, பயிற்சி கொடுக்க கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் நிதியில் கட்டப்பட்டது.ஆனால் நான் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவன். மேலும் இந்த பயிற்சி மையத்தில் 20 சதவீதம் மற்ற சமூகத்தினருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சொன்னேன். அந்த வாய்ப்பை உருவாக்கி தருவதாக உறுதியளித்துள்ளனர்.

அண்மையில் மதுரைக்கு சென்றேன். அங்கு நாடார் சமுதாய மாநாட்டில் கலந்து கொண்டேன். அங்கும் கல்வி சேவை செய்து வருகின்றனர். இந்த கொங்கு பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, எண்ணற்ற பிரச்சிணைகள். என்னை கீழ்த்தரமாக விமர்சனம் செய்தார்கள். எத்தனை நாள் முதலமைச்சராக எத்தனை நாட்கள் நீடிப்பார்கள் என தெரிவித்தனர். ஆனால் நான்கு வருட, இரண்டு மாதம் நல்லாட்சி கொடுத்தேன். மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்தோம். இதில் மருத்துவத்துறையில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரி கொண்டு வந்தோம்‌. 6 சட்டக் கல்லூரிகள், இதில் தருமபுரிக்கும் கொடுத்தோம்.

இன்றைய ஆளுங்கட்சியினர், எதிர்காட்சியாக இருந்தபோது, ஆட்சிக்கு வந்ததும், நீட் தேரவு ரத்து செய்யவோம் என்று சொன்னார்கள். நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் இருக்கு என்று சொன்னார்கள். ஒன்றும் நடை பெறவில்லை. அண்மையில் சேலத்தில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில், கையெழுத்து வாங்கிய பேப்பர்கள் கீழே போட்டி மிதித்தனர்.

கடந்த ஆட்சியில் ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்து, புகார் மனுக்களை பெற்றார். பெட்டி வைத்து, போடச் சொன்னார். பெட்டியின் மீது ஸ்டாலினுக்கு கண் இருக்கு. ஆனால் பெட்டியின் சாவி எங்கு வைத்தார் என்று தெரியவில்லை.ஸ்டாலினுக்கு மக்கள் மீது கண்ணு அல்ல பெட்டியை வாங்கி வாங்கி பழக்கம் என்பதால் அந்த பெட்டியின் மீது தான் அவருக்கு கண்

அதேப்போல் பெட்டியில் போடும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லையென்றால், என்னை நேரடியாக பார்க்கலாம். என் கதவு திறந்திருக்கும் என்று ஸ்டாலின் சொன்னார். எத்தனை பேர் அவரை பார்க்க முடிந்தது. அவரை மட்டும் அல்ல அவரது அமைச்சர்களை கூட பார்க்க முடியலை இது போன்று மக்களை கவர்ச்சியாக பேசி ஏமாற்றியவர் தான் ஸ்டாலின்.

தமிழகத்தில் மின்வெட்டினை படிப்படியாக குறைத்து, விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கியது அம்மா அரசு , ஏரிகளை குடிமராமரத்து பணி மூலம் ஆழப்படுத்தி, விவசாயிகள் இலவசமாக மண் எடுத்துக் கொள்ள உத்தரவிட்டோம். எப்பொழுதும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்தது அதிமுக அரசு.

அரூர் அடுத்த குமரன் அணைக்கட்டு திட்டம் அறிவித்து, ஒப்பந்தம் விடுப்பட்டது. ஆனால் இந்த விடியா திமுக அரசு அத்திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது. அதேப்போல், கே.ஈச்சம்பாடி நீரேற்று திட்டம் அறிவிக்கப்பட்டது‌. அதையும் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. மேலும் எண்ணேகால் புதூர்-தும்பலஹள்ளி திட்டம், அலியாளம் அணைக்கட்டு திட்டம் உள்ளிட்டவைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதே போல் பல திட்டங்கள் ஆமை வேகத்திலும் சில திட்டங்கள் கிடப்பிலும் போடப்பட்டுள்ளன‌என அவர் பேசினார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

53 minutes ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

2 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

2 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

3 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

3 hours ago

விஜய் போல பாஜக பகல் கனவு காண்கிறது.. ஜெயக்குமார் சரமாரி பேச்சு!

2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…

5 hours ago

This website uses cookies.