கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, 12 மணிநேர வேலை சட்ட மசோதாவை தமிழக அரசு வாபஸ் வாங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக உயர்த்தும் மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்தது. இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மட்டுமின்றி, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும், 12 மணிநேர வேலை மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், 12 மணிநேர வேலை சட்ட மசோதாவை தமிழக அரசு வாபஸ் வாங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தொழிலாளர் தினம் இன்று கொண்டாப்படுவதை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு சிவப்பு சட்டை அணிந்து சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக ஏப்ரல் 24-ந் தேதி அறிவித்திருந்தோம். இந்த 12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்படுவதாக இன்று அறிவிக்கிறேன். இது தொடர்பாக அனைத்து சட்டசபை உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படும். திமுக அரசு கொண்டு வந்த சட்டமாக இருந்தாலும் திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச.வும் எதிர்த்தது. இது திமுகவின் ஜனநாயகத் தன்மையை காட்டுகிறது. விட்டுக் கொடுப்பதை நான் அவமானமாக கருதவில்லை. பெருமையாகவே கருதுகிறேன், எனக் கூறினார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.