CM ஸ்டாலினின் பொய் எடுபடாது.. கஞ்சா ஒழிப்பில் முன்னாள் டிஜிபி ‘ஓ’ போட்டது தான் மிச்சம் : இபிஎஸ் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2024, 7:51 pm

CM ஸ்டாலினின் பொய் எடுபடாது.. கஞ்சா ஒழிப்பில் முன்னாள் டிஜிபி ‘ஓ’ போட்டது தான் மிச்சம் : இபிஎஸ் விமர்சனம்!

திருவள்ளூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது எனவும், முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு கஞ்சா ஒழிப்பில் “ஓ” போட்டது தான் மிச்சம் எனவும், இந்தியாவில் தமிழகம் பின்னோக்கி செல்கிறது எனவும் கூறிய பழனிசாமி, திருவள்ளூர் மாவட்டத்தில் செய்த சாதனைகளை பட்டியலிட்டார்.

திருவள்ளுரில் பிரமாண்டமான மருத்துவ கல்லூரி மருத்துவ மனை வல்லரசு நாடுகளில் கூட பார்க்க முடியாது எனவும், 11 அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வந்தோம் எனவும், திமுக 3 ஆண்டுகளில் ஒரு மருத்துவ கல்லூரி கூட கொண்டுவரவில்லை. எனவும், ஸ்டாலினின் ஆட்சி இருண்ட ஆட்சி,அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி எனவும், பழவேற்காட்டில் ₹26 கோடியில் முகத்துவாரம் அமைக்கப்பட்டது,

திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் தரம் உயர்த்தப்பட்டது. திருவள்ளூரில் சட்டக்கல்லூரி கொண்டு வரப்பட்டது, சென்னை-திருவள்ளூர் 4 வழிச்சாலை கொண்டுவரப்பட்டது எனவும் கூறினார்.

அதிமுக ஆட்சியில் மத்தியில் போராடி பல திட்டங்களை கொண்டு வந்தோம்.ஆனால், அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் திமுக ஆட்சி, கிடப்பில் போடப்பட்டு, ஆமை வேகத்தல் நடந்து வருகிறது எனவும், ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம், விடியா திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் எனக்கூறி உரையை முடித்தார் பழனிசாமி.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 243

    0

    0