பண்ணையார் போல 78 ஏக்கரை வைத்துள்ள அண்ணாமலை… தகர பெட்டிய தூக்கினாரு-னு சொன்னால் நம்புவாங்களா..? அதிமுக வேட்பாளர் கேள்வி!

Author: Babu Lakshmanan
26 March 2024, 6:06 pm

ஊழல் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கும், பாஜகவிற்கும், மோடிக்கும் அருகதை கிடையாது என்று கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது :- பாஜகவின் கரூரைச் சேர்ந்த அண்ணாமலை மறைந்த என் தந்தை பற்றி பேசியுள்ளார். அது மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனக்கு 11 வயது இருக்கும் போது, என் தந்தை இறந்துவிட்டார். அண்ணாமலைக்கு தகர டப்பா தூக்க அப்பா இருந்தார். ஆனால் எனக்கு அதற்கு கூட அப்பா இல்லை.

அண்ணாமலை கீழ்த்தரமாக தவறாக பேசியுள்ளார். அதற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்ட வேண்டும். என் அப்பா இறந்தபோது என்னிடம் கூட காசு இல்லாமல் கடன் வாங்கி தான் அவருக்கு காரியம் செய்தேன். அப்பா மறைவிற்கு பிறகு என் அம்மா தான் என்னை கஷ்டப்பட்டு வளர்த்தார். என் அம்மா இல்லானா நான் இல்லை.

இறந்த ஒருவரை பற்றி அண்ணாமலை பொய்யான தகவல் பரப்பி வருகிறார். மேலும், குஜராத்தில் படித்து மெடல் வாங்கி உள்ளேன். திமுக வேட்பாளரும், பாஜக வேட்பாளரும் வாங்க ஆக்கப்பூர்வமான கோவை வளர்ச்சி பற்றி பேசலாம். அதிமுக ஆட்சியில் கோவை மாநகராட்சி சுகாதாரத்தில் இந்தியாளவில் 42வது இடத்தில் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 180 இடத்திற்கு சென்றுவிட்டது.

திமுக ஆட்சியில் பொய்யாக அதிகளவில் வழக்குகள் போடுகிறார்கள். போதை பொருள் என்பது தவறான செயல். போதை பொருள் ஆண், பெண் வித்தியாசம் தெரியாமல் அதிக தப்பு செய்ய தூண்டிவிடுகிறது. கஞ்சா, கஞ்சா சாக்லெட், மாத்திரை, போதைப் பொருள் ஆகியவற்றை திமுக ஆட்சியில் பெருக்கி உள்ளது.

அதிமுக ஆட்சியில் கோவை நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் வளர்ச்சி அடையாமல் கோவை பின் தங்கியுள்ளது. ஊழல் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கும், பாஜகவிற்கும், மோடிக்கும் அருகதை கிடையாது. தேர்தல் பத்திரம் மூலம் 6000 கோடி வாங்கி உள்ளார்கள். திமுகவும் அதே நபரிடம் காசு வாங்கி உள்ளது.

33 மாதம் ஆட்சி காலத்தில் திமுக ஒன்னும் செய்யவில்லை. பாஜக, திமுகவும் ஊழலை பற்றி பேச கூடாது. இந்தி தெரியாது போடா என்று சொன்ன உதயநிதி, தற்போது இந்தி படத்தை விநோயகம் செய்து வருகிறார். கேலோ இந்தியா போட்டியில் உதயநிதி மோடியை சிறப்பு விருந்தினராக அழைத்து வரவேற்றனர். மோடி கோவையில் என்ன சாதனை செய்தார்?? கோவை சாதனைகளை விட்டுவிட்டு குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செய்து அரசியல் செய்கிறார்கள். அந்த சம்பவத்தை நாங்கள் மறக்க நினைக்கிறோம், ஆனால் பாஜகவினர் அதனை நினைவுபடுத்துகிறார்கள்.

திமுக இந்த பக்கம், பாஜக அந்த பக்கம் இருந்து கொண்டு வஞ்சிக்கிறார்கள். தமிழர்கள் மனித நோயம் கொண்டவர்கள். இவர்கள் செய்வதை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். உதயநிதி செங்கல் எடுத்து ஒரு நாள் பாராளுமன்றத்தில் காண்பித்துள்ளாரா..?, பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து உள்ளனர். கோவை மக்கள் யாரும் போய் உதயநிதியை பார்க்க முடியுமா??இல்லை அண்ணாமலையை தான் பார்க்க முடியுமா??

நான் கோவையில் உள்ளவன், என்னை யார் எப்போ வேண்டுமேனாலும் வந்து பார்க்கலாம். அதிமுகவிற்கும், திமுகவிற்கும் தான் போட்டி. அண்ணாமலை இடம் இல்லை. தமிழ்நாட்டிற்கும், கோவை மக்களுக்கும் என்ன நல்லது பண்ணிருக்கீர்கள்..?

கோவையில் பாஜக 60% வாக்கு வாங்கினால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன். கோவை வளர்ச்சி நிறைய விஷயங்கள் உள்ளது. அதனை தான் நாம் வளர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு பொய் பேசி வருகிறார் அண்ணாமலை. கோவையில் நான் வெற்றி பெறுவது உறுதி.

வெற்றி பெற்ற பிறகு வருடம் வருடம் ஆய்வு கூட்டம் நடத்துவேன். ஆய்வு கூட்டத்தில் மக்களை பிரச்சினைகளை தீர்ப்பேன். அண்ணாமலை 20,000 புத்தங்கள் படித்தேன் என்று சொல்லுவது முற்றிலும் பொய். அவர் பிறந்தது முதல் இப்பவரை படித்து இருந்தலே வெறும் 14,000 புத்தங்கள் தான் படித்து இருக்க முடியும் என்று கூறினார்.

பாஜக இந்து துவா கட்சி,திமுக குடும்ப அரசியல் கட்சி என்றும், ஜனநாயகம் முறையில் நம்பிகையாக இருக்கோம்.அதன் படி நடந்து கொள்வோம் என்று கூறினார்.தமிழகத்தில் 39 சீட் பாஜக வெற்றி பெற்றால் அரசியல் விட்டு போவதாக தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை எண்ணும் வரை பாஜகவை நம்ப முடியாது. வாக்கு எண்ணும் பள்ளிக்கு வெளியே உட்கார வேண்டும், என்று கூறினார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!