கோவையில் திமுகவினரும், பாஜகவினரும் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: ஜி PAY.. SCAN பண்ணுங்க.. SCAM பாருங்க : பிரதமர் மோடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள்..!!!
கோவையில் பாஜக சார்பில் அண்ணாமலையும், திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், அண்ணாமலையை ஆதரித்து கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் பாஜகவினர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இரவு 10 மணிக்கு மேலும் பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: அண்ணாமலை நாக்கை வெட்டணும்.. பாஜகவில் திருட்டு மொல்லமாரி பசங்கதான் இருக்காங்க.. செல்லூர் ராஜூ ஆவேசம்!
இதை அப்பகுதியில் இருந்த திமுகவினர் தட்டி கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு உண்டானது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இரு தரப்பினரிடையே சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், கோவையில் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட திமுகவினரை தாக்கியதாக பாஜகவினர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜகவைச் சேர்ந்த ஆனந்த்குமார், மாசானி உள்ளிட்டோர் மீது 294பி, 323, 147 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து பீளமேடு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
புதிய பெயருடன் கெளதம் கார்த்திக் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னை ரவி மோகன் என்று இனிமேல் அழைக்குமாறு அறிக்கை…
ரம்யா பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு ஸ்டோரியா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட்…
விடாமுயற்சியோடு போராடும் அஜித் நடிகர் அஜித் தற்போது சினிமாவை தாண்டி கார் பந்தயத்தில் தன்னுடைய அசாதாரண திறமையை வெளிப்படுத்தி வருகிறார்,அந்த…
கும்பமேளாவில் தமன்னா தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பையா திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை தமன்னா,இந்த…
அடுத்தடுத்து அப்டேட்டை வெளியிட ரெடி நடிகர் அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி…
This website uses cookies.