எக்கச்சக்க பிழை… அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிச்சிருக்கனும்… பரிசீலனையின் போது பாஜக – நா.த.க. இடையே மோதல்!

Author: Babu Lakshmanan
28 March 2024, 2:35 pm

கோவை தொகுதியில் வேட்புமனு மறுபரிசீலனையின் போது, பாஜக அண்ணாமலை வேட்புமனுவில் தவறுகள் உள்ளதாகக் கூறி, அதனை நிராகரிக்குமாறு பல்வேறு கட்சியினர் வலியுறுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று வரை தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வேட்புமனு மறுபரிசீலனை செய்யப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் மற்றும் அதிகாரிகள் தலைமையில் வேட்பாளர்கள், வழக்கறிஞர்கள் முன்னிலையில் பரிசீலனை நடைபெற்றது.

இதில் அண்ணாமலை தரப்பில் இரண்டு வேட்பு மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு வேட்பு மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது. மற்றொரு வேட்பு மனுவில் பிரமாண பத்திரத்தில் அண்ணாமலையின் ஆவணங்கள் முறையாக தாக்கல் செய்யவில்லை எனவும், நம்பர்:26 விண்ணப்பத்தில் வேட்பாளரின் குற்றப்பின்னணி வரிசை படுத்தவில்லை எனவும், வேட்பாளரின் வாக்கு செலுத்தும் இடமானது முறையாக குறிப்பிடவில்லை எனவும் பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டினர்.

அதிமுக , திமுக, நாம் தமிழர் கட்சி சார்ந்த வழக்கறிஞர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியான கிராந்தி குமார் பாடி முன்னிலையில் தேர்தல் ஆணையத்தின் கையேடு புத்தகத்தை மேற்கோள் காட்டி தெரிவித்தனர். அண்ணாமலையின் வேட்பு மனுவை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் அறையில் சலசலப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து, இந்த குற்றச்சாட்டுகளை பிழைகளாக ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறிய தேர்தல் நடத்தும் அதிகாரி, அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அறிவித்தார். இது குறித்து கட்சியினர்கள் கூறுகையில், தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். அதே சமயம் பாஜகவினர் அதிகாரிகளே அண்ணாமலையின் வேட்புமனு ஏற்று கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளதாக கூறினர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி