திமுகவைப் போன்று ஒரு குடும்பத்திற்காக மோடி உழைக்கவில்லை என்றும், தேசத்தையே தமது குடும்பமாக மோடி பார்ப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை – மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு, கோவை வேட்பாளர் அண்ணாமலை, நீலகிரி வேட்பாளர் எல்.முருகன், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் வசந்தர ராஜன், திருப்பூர் தொகுதி வேட்பாளர் முருகனாந்தம் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
மேலும் படிக்க: உங்க மன்னிப்பை ஏற்க முடியாது : தண்டனைக்கு தயாராக இருங்க.. PATANJALI வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து!
முன்னதாக கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது :- தமிழ்நாட்டு மக்களோடு இருப்பதற்காகவும், அவர்களோடு இணைந்து செயல்படுவதற்காகவும் பிரதமர் மோடி வருகிறார். திமுகவைப் போன்று ஒரு குடும்பத்திற்காக மோடி உழைக்கவில்லை ; தேசத்தையே தமது குடும்பமாக மோடி பார்க்கிறார். பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் திமுகவுக்கும், முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கும் பிடிப்பது கிடையாது.
தமிழ் மக்களின் ஆசிர்வாதம் பிரதமர் மோடிக்கு தேவை ; தமிழக மக்கள் தங்கள் ஆசிர்வாதங்களை வழங்க வேண்டும். இம்முறை திமுகவினர் யாராவது ஓட்டுக்கு பணம் கொடுத்தால், அது கஞ்சா மூலம் வந்த பணம் என்பதை மறந்துவிடாதீர். தமிழ் கலாச்சாரத்தை 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி உயர்த்தி பிடித்துள்ளார் ; தமிழ்நாட்டில் பிறக்காத மறத்தமிழன் மோடி.
உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் தமிழ் கலாச்சாரத்தை பண்பாட்டை கொண்டு சென்றவர் பிரதமர் மோடி. 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் சிறை சென்றவர் ஆ.ராசா. அதே வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டவர் கனிமொழி, எனக் கூறினார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.