தேர்தல் நேரத்தில் மட்டும் திமுக காரர்களுக்கு வியாதி இருப்பதாகவும், தேர்தல் வந்தால் மட்டும் கோவிலுக்கு செ சென்று விபூதி பூசுவார்கள் என்று கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிரமாதமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார் மோடி அவர்கள். கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதற்கான ஏற்பாடுகள் கட்சியோட நிர்வாகிகள் மூலமாக நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு… CM என்பதால் சலுகை அளிக்க முடியாது ; டெல்லி உயர்நீதிமன்றம்
மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்காக வந்து கொண்டுள்ளார்கள். வருகின்ற 13ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார். நீலகிரி தொகுதியில் அவினாசி சட்டமன்ற தொகுதி பகுதியில் இருக்கக்கூடிய பெண்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பயனாளிகளாக, பங்கேற்பாளராக இருக்கின்றவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
கோவையை பொறுத்தவரை அன்று மாலை 4 மணிக்கு பிரம்மாண்டமான மகளிர் பேரணி ஏற்பாடு ஆகியுள்ளது. கிட்டத்தட்ட 50,000 பேர் கலந்து கொள்வார்கள். மாநிலத்தின் தலைவர் அண்ணாமலை, நிர்மலா சீதாராமன் அந்த பேரணியில் கலந்து கொள்வார்கள். பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் ஒரு அரங்கு கூட்டம் ஏற்பாடு ஆகியுள்ளது. அதற்கான கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கட்சி ஒவ்வொரு நாளும் பலமடைந்து வருகிறது. நேற்று திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்கு சென்று இருந்தேன். கிராமப்புறம் நகரப்புறமாக இருந்தாலும், படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழை, பணக்காரர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என எந்தவித வித்தியாசம் இல்லாமல் பிரதமர் மோடி அவர்கள் அன்பை பெற்றுள்ளார். தமிழகத்தின் பாஜக வளர்ந்தாக வேண்டும் என்ற மாநில தலைவர் அண்ணாமலையின் முயற்சிக்கு ஆதரவு கொடுத்து உள்ளார்கள். தேர்தல் களம் முழுமையாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது, எனக் கூறினார்.
மேலும் படிக்க: எனக்கும், ஆர்.எம்.வீரப்பனுக்கும் இருந்த நட்பு மிகவும் புனிதமானது ; அஞ்சலி செலுத்திய பிறகு கண்கலங்கிய நடிகர் ரஜினிகாந்த்..!!!
பிரதமர் மோடி அவர்களின் கட்டவுட் எடுத்த கேள்விக்கு, தேர்தல் ஆணையம் பல்வேறு விதிகள் விடுத்துள்ளன. அந்த விதிவிலக்கு அதிகாரிகள் தங்களை எல்லாம் எங்களிடமே உள்ளது போல் எடுத்து வருகிறார்கள்.
யுகாதி பண்டிகைக்கு முதல்வர் அவர்கள் தெலுங்கு மொழி பேசுபவர்கள் அனைவருக்கும் யுகாதி வாழ்த்துக்கள் கூறினார் மாநிலத்தின் முதல்வர். தேர்தல் நேரத்தில் மட்டும் திமுக காரர்களுக்கு வியாதி இருக்கிறது. தேர்தல் வந்தால் மட்டும் கோவிலுக்கு செல்வார்கள். அதில் மட்டுமே விபூதி பூசுவார்கள். எங்களுக்கு எந்தவித வித்தியாசம் இல்லை, என கூறுவார்கள்.
தேர்தல் முடிந்து அடுத்த நிமிடத்தில் உடனடியாக கோவிலுக்கு போகிற வரை திட்டுவார்கள். சாமிகளை தப்பாக பேசுவார்கள். யுகாதிக்கு வாழ்த்து தெரிவிக்கிறார், தமிழ் புத்தாண்டு சித்திரை 1, தை 1 என்றார்கள். தை ஒன்று யாரும் கொண்டாடுவதில்லை. முதல்வர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டார். பிரதமர் அனைவருக்கும் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வார்கள், எனக் கூறினார்.
ஆ. ராசா கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கோவிலுக்கு செல்லலாம் என்று கூறியது பற்றிய கேள்விக்கு, “ஆ.ராசா முன்னதாக எப்படி எப்படி எல்லாம் பேசினார். தேர்தல் நேரத்தில் ஒரு உபதேசம் போடுவார்கள். தேர்தல் அறிக்கைகள் ஒரு குழு போட்டுள்ளது, கூடிய விரைவில் தேர்தல் அறிக்கை வரும், எனக் கூறினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.