பாதுகாப்பு வளையத்துக்குள் வந்தது கோவை : இனி என்ஐஏ ரெய்டு ஆரம்பம்… கூடுதலாக காவல்நிலையங்கள்.. முதலமைச்சர் உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 October 2022, 3:12 pm

கோவை உக்கடத்தில் நிகழ்ந்த சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.

இந்தநிலையில் கோவை உக்கடத்தில் நிகழ்ந்த சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

கோவையில் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிப்படுத்தவும் காவல்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கோவை கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் பகுதிகளில் புதிதாக காவல் நிலையங்கள் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!