கோவை சம்பவம் விபத்தல்ல… திட்டமிட்ட சதிச்செயல் ; முதல்வர் வாய்திறக்காதது ஏன்..? இது அவமானம்… எச்.ராஜா அட்டாக்..!!

Author: Babu Lakshmanan
26 October 2022, 10:53 am

கோவை சிலிண்டர் விபத்து பற்றி பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.

கோவை ஈஸ்வரன் கோயில் வீதியில் கார் வெடித்து ஜமேஷா முபீன் என்ற நபர் பலியானார். தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் நடந்த இந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மேலும், ஜமேஷா முபீன் பயணித்த காரில் ஆணி, பால்ஸ் குண்டுகள், இரண்டு சிலிண்டர் தடயங்கள் கிடைக்கப்பெற்றன. மேலும், நாட்டு வெடிகுண்டு தயாரிக்க தேவையான வேதியியல் மூலப்பொருட்கள் அவரது இல்லத்திலும் கைப்பற்றப்பட்டன. இதனால், சதி செயலுக்காக முயன்றாரா..? என்ற சந்தேகம் வழுத்துள்ளது.

இந்நிலையில் அந்த வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா(25 ), முகமது அசாருதீன்(23), ஜிஎம் நகரை சேர்ந்த முகமது ரியாஸ்(27), ஃபிரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26) உள்ளிட்ட ஐந்து நபர்களை உபா சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தெளிவான அறிக்கையை வெளியிடவில்லை என்றும், யாரை காப்பாற்ற இதுபோன்று செயல்படுகின்றனர் என தமிழக பாஜக தலைவர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வாய் திறக்காதது ஏன்..? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- அதில், ‘கோவையில் 23 ம் தேதி நிகழ்ந்தது கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்து அல்ல திட்டமிட்ட பயங்கர வாத சதிச் செயல். 5 நபர்கள் கைது என்று கோவை கமிஷ்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தகவல். சட்டம் ஒழுங்கு, காவல்துறை ஆகியவற்றை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் கண்டனம் தெரிவிக்கவில்லை. Shame’ என்று பதிவிட்டுள்ளார்.

  • Anirudh updates on Vidamuyarchiஅனிருத் வெளியிட்ட “விடாமுயற்சி” மாஸ் அப்டேட்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
  • Views: - 467

    0

    0