கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து சம்பவம் ; 5 பேர் கைது… பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டமா..? உக்கடம் போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
25 October 2022, 8:55 am

கோவை கோட்டைமேடு பகுதியில் காரில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடி விபத்து விவகாரம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை ஈஸ்வரன் கோயில் வீதியில் காரில் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபீன் என்ற நபர் பலியானார். தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் நடந்த இந்த சம்பவம் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. பலியான ஜமேஷா முபீன் தற்செயலான விபத்தில் இறந்தாரா..? அல்லது சதி வேலைக்கு முயன்ற நிலையில் இறந்தாரா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் ஜமேஷா முபீன் பயணித்த காரில் ஆணி, பால்ஸ் குண்டுகள், இரண்டு சிலிண்டர் தடயங்கள் கிடைக்கப்பெற்றன. மேலும், நாட்டு வெடிகுண்டு தயாரிக்க தேவவியான வேதியியல் மூலப்பொருட்கள் அவரது இல்லத்திலும் கைப்பற்றப்பட்டன.
இதனால், சதி செயலுக்காக முயன்றாரா..? என்ற சந்தேகம் போலீஸாருக்கு சந்தேகம் வழுத்தன.

இது தொடர்பாக உக்கடம் , ஜி எம் நகரில் தனிப்படை போலிஸார் தீவிர விசாரணை நடத்தியிருக்கின்றனர். கார் தந்து உதவிய நபர் யார் ? முபின் பின்னணி என்ன ? முபின் ஏதேனும் அமைப்பில் இருக்கின்றாரா என்ற விசாரணை நடந்து வருகிறது.

விசாரணை அடிப்படையில் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே, மாருதி காரில் கேஸ் சிலிண்டர் வெடி விபத்து வழக்கில் ஐந்து நபர்கள் கைது செய்யப்படனர். முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23) இந்த இருவரும் உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர்கள். அதுபோல் முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) இந்த மூன்று பேரும் உக்கடம் G.M.நகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

இதனிடையே, உக்கடம், டவுன் ஹால், ரயில் நிலையங்களில் கமிஷ்னர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் மாநகர காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர். சிஆர்பிஎஃப் வீரர்களும் உடன் இருக்கின்ற்னர். உயர் அதிகாரிகளும் தீவிர தணிக்கை நடக்கும் இடங்களில் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

  • kantara 2 release date update தசராவை குறிவைக்கும் காந்தாரா 2 …. கோலாகலமாக கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்..!
  • Views: - 387

    0

    0