கோவையில் சோகம்.. தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி ; 2 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

Author: Babu Lakshmanan
4 July 2023, 8:49 pm

கோவை ; கோவையில் தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 4 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை – குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. சிறிய பக்கவாட்டு சுவரை ஒட்டி புதிதாக 10 அடி உயரம் கொண்ட பக்கவாட்டு சுவர் கட்டும் பணியில் வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இந்த சூழலில், பழைய சுவர் திடீரென தொழிலாளர்கள் மீது இடிந்து விழுந்ததில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். இடிபாடுகளில் சிக்கி ஆந்திராவைச் சேர்ந்த ஜெகநாதன் (53), சத்தியன்(48), கண்ணய்யா(49), மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிஷ் கோயஸ்
ஆகியோர் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Bigg Boss Tamil Season 8 This Week Double Eviction யாருமே எதிர்பார்க்காத எலிமினேஷன்… பிக் பாஸ் ரசிகர்கள் கொந்தளிப்பு : கடும் எதிர்ப்பு!